world

img

புதிய வகை கொரோனாவால் இதுவரை மோசமான பாதிப்பு இல்லை... உலக சுகாதார நிறுவனத் தலைவர் தகவல்

லண்டன்:
புதிய வகை கொரோனா வைரசால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டதாக இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை என்று என உலக சுகாதார நிறுவனத் தலைவர்தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் உருமாற்ற மடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்து உடனானவிமானம், ரயில் போக்குவரத்து களை பல நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. மேலும் சில நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்த நிலையில் இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் கேபிரியேசஸ் கூறுகையில், வைரஸ் கிருமி உருமாற்றம் அடைவது என்பது இயற்கையானது. இதுபோன்ற மாற்றங்கள் வரும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இதுபற்றி சரியான தகவல்கள் இல்லாமல் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாதங்களை செய்கிறார்கள்.

இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள அறிக்கையில் இந்த வைரசின் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது என்றே கூறியுள்ளனர். ஆனால்இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை
என்று தெரிவித்தார்.

எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
இதனிடையே, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவது இயல்பானதுதான். இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் சந்தீப் குலேரியா தெரிவித்துள் ளார். இந்தியாவிலும் உருமாற்ற வைரஸ் பாதிப்பு குறித்து தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  வைரஸ் உருமாற்றம் குறித்து எய்ம்ஸ் இயக்குநர் சந்தீப் குலேரியா கூறுகையில், கொரோனா வைரஸ் ஏற்கனவே பல மாற்றங்களை அடைந்துள்ளது. சராசரியாக மாதம் இரண்டு முறைமாற்றமடைகிறது. எனவே, இந்தஉருமாற்றம் என்பது கொரோனா வின் இயல்பான மாற்றம்தான். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டியதில்லை.ஏற்கெனவே தயாராகியுள்ள தடுப்பூசிகளின் திறனையும் இந்த கொரோனாவின் மாற்றம் பாதிக்காது. நாம் அளித்து வரும் சிகிச்சையிலும் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டியதில்லை. புதிய வைரஸில் பரவும் வேகம் மட்டுமே மாறியுள்ளது. பழைய கொரோனா வைரஸைக் காட்டிலும் 70 சதவிகிதம் வேகமாகப் பரவும் திறன் கொண்டுள்ளது புதிய வைரஸ். இதனால் உயிரிழப்புகள் எதுவும் அதிகரிக்கவில்லை என்பது நம்பிக்கைக்குரிய செய்தி என்று தெரிவித்துள்ளார்.

;