world

img

காலத்தை வென்றவர்கள் : புரூனோ நினைவு நாள்....

ஜியார்டனோ புரூனோ ஒருஇத்தாலிய தத்துவ அறிஞர், அறிவியலாளர், கவிஞர். தெற்கு இத்தாலியில் நோலா எனும் நகரில் 1548 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ஃபிலிப்போ. பின்னர் நேபிள்ஸ் நகரம் சென்றபோது, தமது 17 ஆவதுவயதில் அவர் வைத்துக் கொண்ட பெயரே ஜியார்டனோ.அவரது சுதந்திர சிந்தனைகளால் பலரும் அவரை கிளர்ச்சிக்காரராகவே பார்த்தனர். பல நாடுகள், நகரங்கள் என அவரது கல்வியும் பயணமும் தொடர்ந்தது. மதரீதியான சிந்தனையிலிருந்து விஞ்ஞான ரீதியான சிந்தனைகளில் முழு மூச்சாக இறங்கினார். ‘‘இந்த உலகம் உருண்டையானது; பூமி சுற்றுவதால்தான் இரவு பகல் ஏற்படுகிறது; சூரியன்தான் சூரிய மண்டலத்தின் மையம்; சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டிருக்கிறது; விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன் களைப் போன்றே சூரியனும்ஒரு விண்மீன். எல்லா விண் மீன்களுக்கும் பூமி போல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது’’ என்றபலவகையான வானவியல் கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே முதன் முதலில்பகிர்ந்த விஞ்ஞானி ஜியார் டனோ புரூனோ.

அதற்காக அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு 1600 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இல் ரோம்நகர் கிறிஸ்தவ மதச்சபை அவரை உயிருடன்எரித்துக் கொன்றது. அவரின் அர்ப்பணிப்பு என்பது அறிவியல் உலகில் மகத்தானது. இறையியல் கொள்கைக்கும் இயற்கை தத்துவவாதிகளுக்கும் துளிர்விட்ட சுதந்திரதாகத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால்வெடித்த தீமூட்டல் இது என நவீன அறிவியல்முன்னோடிகளால் கணிக்கப்படுகிறது.

பெரணமல்லூர் சேகரன் 

;