world

img

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பு மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் - ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பு மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்த போவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியதாவது : 
அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தக் கட்டு ஏற்படுவதாகக் கூறி டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் தற்காலிகமாக இத்தடுப்பு மருந்துக்கு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரத்த உறைவு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால், தொடர்ந்து  அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்தை பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது..
இதுவரை ஆஸ்திரேலியாவில் சுமார் 150,000 பேர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் 54 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை வாங்க ஆஸ்திரேலிய அரசு ஆஒப்பந்தம் செய்துள்ளது.அவற்றில் சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது..

;