world

img

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை  உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் - ஐ.நா.

நைஜீரியாவின் அரசு நடுநிலைப் பள்ளியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 317 மாணவிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில்  தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று, 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று தீவிரவாதிகள் புகுந்து, அங்குள்ள 317 மாணவிகளை கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், 
“நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். டிசம்பர் மாதத்திலிருந்து மூன்றாவது முறையாக கடத்தல் சம்பவம் நடைபெறுகிறது.
இது குழந்தைகள் மீது செலுத்தப்படும் பயங்கரமான வன்முறை. அவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படக் கூடும். கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;