world

img

போட்ஸ்வானாவில் பெரிய வைரம் கண்டுபிடிப்பு....

கேபரான்:
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா நாட்டில் பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆகும். 

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும். இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரியவைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லிமீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் ஜூன் 1 ஆம் தேதியன்று அரசு துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விடபோட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;