world

img

தெற்கு கானாவில் சாலை விபத்து - 10 பேர் உயிரிழப்பு 

தெற்கு கானாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான கானாவின் தெற்கு பகுதியில் அக்ரா-கேப் கோஸ்ட் நெடுஞ்சாலை பகுதியில் கொமோவா மேம்போங் என்ற இடத்தில் நேற்று எதிரெதிரே சென்ற 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்நிலையில், இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் வின்னெபே நகராட்சி தீயணைப்பு அதிகாரி ஹென்றி அசீயேடு தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வின்னிபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்துகளின் இடிபாடுகளில் சில பயணிகள் சிக்கிக் கொண்டனர். எனினும் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டுள்ளனர் என்று ஹென்றி அசீயேடு தெரிவித்துள்ளார். இந்த விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

;