world

img

சிதைந்து போய்க்கிடக்கும் ஆப்கன் பொருளாதாரம்

காபூல், நவ.29- பணப்புழக்கம் கிட்டத்தட்ட நின்று விட்ட காரணத்தால் ஆப்கா னிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் பெரும் சிதைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வங்கிகளிலும், வர்த்தக நிறு வனங்களிடமும் பணப்புழககம் நின்று விட்டது. இதனால் மக்கள் கைகளிலும் ரொக்க இருப்பு இல்லை. இந்நிலையில் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை கள் கடுமையான எகிறியுள்ளன. பட்டினி நெருக்கடியை ஆப்கா னிஸ்தான் சந்திக்கப் போவதாக பொருளாதார வல்லுநர்கள் எச்ச ரிக்கிறார்கள். கைகளில் பணம் இல் லாததால், வீட்டில் உள்ள பொருட் களை உணவுப் பொருட்களுக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

முகமது ரசூல் என்பவரின் அனு பவம் சோகத்தை வரவழைப்பதாக உள்ளது. அவரின்  9 வயது மகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள் ளார். அவர்கள் ஊரில் உள்ள வங்கி பணமில்லாத காரணத்தால் மூடப் பட்டு விட்டது. கையில் இருந்த சில டாலர்களைக் கொண்டு ஒரு டாக்சி யில் ஏறி, சில நூறு கிலோ மீட்டர் கள் பயணம் செய்திருக்கிறார். மசர் இ ஷரிப் என்ற நகரத்தை  அடைந்த அவர், அங்குள்ள வங்கியில் பணம் எடுக்கும் முயற்சியில் வரி சையில் நின்றிருக்கிறார். ஆப்கா னிஸ்தானில் இயங்கிக் கொண்டி ருக்கும் சில வங்கிகளில் இதுவும்  ஒன்றாகும். மதியம் 3 மணிக்கு வெளி யில் வந்த வங்கி ஊழியர், பணம் இல்லை. எல்லாரும் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் ஆப்கன் மக்கள் திணறு கிறார்கள்.

தாலிபானின் மூன்று மாத கால ஆட்சியில் பொருளாதாரம் சிதைந்து போய் விட்டது. உலகம் சந்தித்து வரும் மிகப் பெரும் அபா யங்களில் ஒன்றாக இங்குள்ள நிலை மை கருதப்படுகிறது. நவம்பரின் துவக்கத்திலேயே சர்வதேச நிதி யம்(ஐ.எம்.எப்) எச்சரிக்கை விடுத்தது. கிட்டத்தட்ட 32 லட்சம் குழந்தைகள் சத்துக்குறைவு பாதிப்பை எதிர்கொள்வார்கள்  என்றும், அதில் சுமார் 10 லட்சம்  பேர் வெப்பநிலை மாற்றத்தால் உயி ரிழக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறியிருந்தது. இதற்கு முன்பிருந்த அரசுகள் வெளிநாடுகளின் நிதியுதவியை வைத்து சமாளித்துக் கொண்டிருந் தன. ஒட்டுமொத்த ஆப்கனின் உள் நாட்டு உற்பத்தியில் 45 சதவிகி தம் வெளிநாடுகளில் இருந்து கிடைத்து வந்தது. ஆப்கன் பட்ஜெட்டில் 75 சதவிகித நிதி வெளிநாடுகளின் நிதியுதவி மூல மாக நிரப்பப்பட்டது. அரசியல் ரீதி யாக தாலிபான்கள் அந்நியப்பட்டு நிற்கையில் சர்வதேச சமூகம் என்ன செய்யப் போகிறது என்பதே தற்போ தைய கேள்வியாக இருக்கிறது.

;