world

img

ஆப்கானில் இந்தியர்கள் கடத்தல்: தலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் கடத்தல் என்று வெளியான செய்திக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியை தலிபான்கள் கைப்பற்றிய பின் அங்கிருந்து பொதுமக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் நிலையை ஊகித்து தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்கும் முயற்சியில் முன்கூட்டியே ஈடுபட்டனர். ஆனால்  மோடி அரசு ஆப்கனில் வசித்த இந்தியர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வந்தது. இதனால் ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள் தவிக்க மோடி அரசே காரணம் என சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். 
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் விமான நிலையம் அருகே 150க்கும் மேற்பட்ட இந்தியர்களை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  மேலும் பிடிபட்ட இந்தியர்களை தாலிபன்கள் தாக்கி சித்தரவதை செய்வதாகவும் ஆப்கன் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியானது. 
ஆனால் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 

;