world

img

டேனிஷ் சித்திக் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின்  இரங்கல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த  இந்தியப் புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானில் கந்தகார் பகுதியில் தலிபான்கள் பாதுகாப்பு படையினர் நடந்த மோதலில் உயிரிழந்தார்.  
அவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தொற்றுநோய்கள், படுகொலைகள் மற்றும் நெருக்கடியான நேரங்களில் ஏற்பட்ட பேரழிவுகளை தனது புகைப்படத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற புகைப்படக் கலைஞர் சித்திக் மறைவால் வருத்த முற்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

;