world

img

ஆப்கான்: ராணுவ வீரர்களிடம் கொடுக்கப்பட்ட குழந்தையின் நிலை என்ன ?

காபூல், 
ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள்  கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து பல்வேறு பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் முள்வேலியைத் தாண்டி ராணுவ வீரர்களிடம் குழந்தையைக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. 
அப்போது தாங்கள் தப்பிச்செல்ல இயலாத காரணத்தால் தங்கள் குழந்தைகளாவது தப்பிப் பிழைக்கட்டும் எனக் குழந்தைகளை ராணுவ வீரர்களிடம் கொடுத்ததாகத் தகவல் வெளியானது. அப்படி மூன்று குழந்தைகள் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. 
இதுகுறித்து  ஆப்கானில் உள்ள அமெரிக்க ராணுவ  அதிகாரி ஜிம் ஸ்டேன்சர் கூறியிருப்பதாவது,
காபூல் விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் வாங்கிய குழந்தைகள் வேறு நாட்டிற்கு அழைத்துச்செல்லப்படவில்லை.  அந்த குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குழந்தையின் பெற்றோர் தெரிவித்திருந்த நிலையில், அந்த குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ராணுவவீரர்கள் முள்வேலியைத் தாண்டி வாங்கினர். அந்த குழந்தைகள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது அந்த பெற்றோர்களும் குழந்தைகளும் எங்கிருக்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதனை பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான்கிர்பையும் உறுதிப்படுத்தியுள்ளார். 

;