world

img

பேருந்தில் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி  

ஆப்கானிஸ்தானில் மினி பேருந்தில் குண்டு வெடித்ததில் 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.  

ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தில் குண்டு வெடித்துள்ளது. இதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அலுவலக செய்தித் தொடர்பாளர் சபித் ஹர்வி கூறுகையில், பயணிகள் வாகனத்தின் எரிபொருள் டேங்கில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டும் வெடிகுண்டு இது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஹெராத் மாகாண காவல்துறை மற்றும் கலாச்சாரத் துறையும் குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளன. மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

;