world

img

பாகிஸ்தானில் இருந்து 10,000 ஜிகாதிகள் வந்துள்ளனர்... இம்ரான் கான் முன்னால் ஆப்கன் ஜனாதிபதி புகார்....

பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்பை இன்னும் துண்டித்துக் கொள்ளவில்லை என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கனி புகார் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஜிகாதி ஆயுதப் போராளிகள்பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டனர் என்று தங்கள் நாட்டின் உளவுத்துறை தெரிவிப்பதாகவும் அஷ்ரப் கனி கூறியுள்ளார்.இவை அனைத்தையும் வெள்ளிக் கிழமை உஸ்பெக்கிஸ்தானில் நடந்தமத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான இணைப்பு தொடர்பான மாநாட்டில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பேசினார். அவர் பேசிய பொழுது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவருக்கு சில அடி தூரத்திலேயே அமர்ந்திருந்தார்.ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள்தான், தற்போது ஆப்கனில் நடப்பதற்கு எங்களைக் குறை கூறக் கூடாது என்றுஇம்ரான் கான் அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்வினை ஆற்றியுள்ளார்.

;