world

img

அல்பேனியாவில் அமைந்த இடதுசாரி அரசாங்கம்:அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம்

அல்பேனியா நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று பெண் அமைச்சர்கள் அதிகம் இடம்பெரும் வகையில் அமைக்கப்பட்ட அமைச்சரவைக்கு ஒப்புதல் அளித்தது. இதில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வது, சுற்றுலா துறை, வேளாண் துறை மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற அல்பேனியா நாடாளுமன்ற தேர்தலில் அல்பேனியா சோசலிஸ்ட் கட்சி 74 இடங்களையும், அல்பேனிய ஜனநாயக கட்சி 59 இடங்களிலிம் வென்றது.

அல்பேனிய சோசலிஸ்ட் கட்சியின் தலைவரான ஏடி ரமா பேசுகையில், இந்த புதிய அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான பெண்களைக் கொண்ட அமைச்சரவையாக 17 பேர் கொண்ட அமைச்சரவையில் 12 பெண் அமைச்சர்கள் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளது என்றார்.

மேலும், இந்த அரசாங்கத்தின் முக்கிய சவால்களாக நவம்பர் 2019-இல்  பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து புனரமைப்பு செய்து முடிப்பது மற்றும் தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம், அத்துடன் ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது, ஆண்டுதோறும் குறைந்தது 4% வளர்ச்சியை அதிகரிப்பது, சம்பளத்தை உயர்த்துவது மற்றும் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க கவனம் செலுத்தப்படும் என்றார்.  

2.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அல்பேனியா, 2009 முதல் நேட்டோ உறுப்பினராக இருந்து வருகிறது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய யூனியனுடன் முழு உறுப்பினர் ஆவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

;