world

img

டிரம்ப்பிற்கு எதிராக  யூடியூப் நிறுவனமும் நடவடிக்கை....

வாஷிங்டன்:
டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனமும் நீக்கியுள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6 அன்று டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில்  காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20 அன்று மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை  எச்சரித்துள்ளது.

இந்நிலையில் வன்முறை தொடர்பாக சமூகவலைதளமான டிவிட்டரில் பல்வேறு கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக டிவிட்டர் நிறுவனம் நிறுத்தியது. கடந்த வாரம்  டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியது.  இந்நிலையில் அடுத்த நடவடிக்கையாக டொனால்டு டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனமும் நீக்கியுள்ளது.  வன்முறையைதூண்டும் வகையிலும், விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை யூடியூப் நிறுவனம் நீக்கி நடவடிக்கைஎடுத்துள்ளது.

;