world

img

காலத்தை வென்றவர்கள்... ஹியூகோ சாவேஸ் பிறந்த நாள்....

சாவேஸ் 1954ஆம் ஆண்டு ஜூலை 28ல்வெனிசுலாவின்னி பாரினாஸ் மாகாணத்தில் உள்ள சபனேட்டா என்ற ஊரில் பிறந்தார். 1975-ஆம் ஆண்டு துணை லெஃப்டினெண்டாகப் பொறுப்பேற்றார். பிறகு,மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்று
கிறார். தன்னைப்போன்ற எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைத்து ‘பொலிவார் புரட்சி ராணுவம்’ என்ற ரகசிய அமைப்பை உருவாக்குகிறார். 1989-ம் ஆண்டுபிப்ரவரியில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அதனால் அரசுக்கு எதிராக ரகசிய ஆயுதப் போராட்டத்துக்குத் திட்டமிட்டார். ஆனால் புரட்சி தோல்வியடைந்து சாவேஸும் இயக்கத்தாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சாவேஸ் நாடு முழுவதும் பிரபலமானார்.

1998 டிசம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1999 பிப்ரவரி 2 அன்று பொறுப்பேற்றார் சாவேஸ். ராணுவம்,விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றை மக்கள் சேவையில் இறக்கினார்.சொற்ப நபர்களிடம் நாட்டின் 75 சதவீத நிலம் இருந்தது. அவைஇனி அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று அறிவித்தார். கல்வி, மருத்துவம் என அனைத்திலும் புதிய திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டன.பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். மேலும், தனியார் துறைகளுக்கு வரம்புகளை விதிப்பது, உற்பத்தியில் அரசு தலையிடுவது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டார். ‘ஏது... இன்னொரு காஸ்ட்ரோவா!’ என்று அமெரிக்க மற்றும் பிற வல்லரசு நாடுகள் எரிச்சலடைந்தன. சாவேஸுக்கு எதிராக சி.ஐ.ஏ-வின் மறைமுகச் செயல்பாடு, ஆட்சிக் கவிழ்ப்பு, கொலை முயற்சி அனைத்தும் திட்டமிடப்பட்டன. சளைக்காமல் இயங்கிக்கொண்டிருந்தார் சாவேஸ். 2013-ம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.

- பெரணமல்லூர் சேகரன்

;