world

img

2025 முதல் விண்டோஸ்  10 செயல்படாது - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு!


பெரும் பகுதியின் கணினியில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமான  விண்டோஸ் 10 வருகிற 2025 வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் செயல்படாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு கணினியில் பல்வேறு மென்பொருட்களையும் பதிவேற்றம் செய்து எளிதாக இயக்கிட பெரும்பகுதியானவர்கள் விண்டோஸ் 10 என்ற இயங்கு தளத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த இயங்கு தளத்தை உருவாக்கியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் . இந் நிறுவனம் 1983 நவம்பர் 20 அன்று முதன் முதலாக விண்டோஸ் 1 என்ற இயங்கு தளத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் அதில் பல்வேறு நவீன மேம்பாடுகளை செய்து 1995 ல் விண்டோஸ் 95 என்று துவங்கி தற்போது விண்டோஸ் 10 என்ற மேம்படுத்தப்பட்ட இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த இயங்குதளமும்  2025 வரையே செயல்படாது. அதற்கு மாற்றாக வரும் ஜூன் 24 ம் தேதி விண்டோஸ் 10 ற்கு அடுத்ததாக மேம்படுத்தப்பட்ட  விண்டோஸ் 11 ஐ மைக்ரோ சாஃப்ட் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா ஏற்கனவே  விண்டோஸ்- ன் அடுத்த மேம்படுத்தப்பட்ட இயங்கு தளம் பல்வேறு வகையில் அடுத்த தொழில் நுட்பத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என தெரிவித்திருந்தார். 
இந்நிலையில்   கடந்த ஜூன் 15ஆம் தேதி சீன இணையதளமான பைடு டைபாவின் பயனர் ஒருவர்  விண்டோஸ் 11 ன் புதிய இயங்குதள பதிப்பின் ஸ்கிரீன் ஷாட்களை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அதன் செயல்பாடுகள் ஆப்பிள் இயங்குதளத்தை போன்று பல்வேறு புதிய நுட்பங்களும் இணைக்கப்பட்டிருப்பதாக இணைய தளங்களில் பலரும் எழுதி வருகின்றனர். இது புதிய எதிர்பார்ப்பை கணினி வல்லுநர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.
 

;