world

img

இந்தியாவுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்....

வாஷிங்டன்:
இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அமெரிக்க அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி  ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு 75 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அமெரிக்கஅரசு அனுப்பி வைத்தது.இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “இந்தியாவுக்கு அமெரிக்கா 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது. இது போதாது, கூடுதலாக வழங்க வேண்டும். அமெரிக்கா உலகளவில் தடுப்பூசி திட்டத்திற்கு உதவுவதற்கான மசோதாவுக்கு 116 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளவில் உருவாகும் உருமாறிய புதிய கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, விநியோகிப்பது, தொற்று நோய் பரவலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறுதிட்டங்களை செயல்படுத்த முடியும்” என்றுதெரிவித்தார்.

;