world

img

அமெ. நாடாளுமன்றத்தில் புகுந்து வரலாறு காணாத வன்முறை... டிரம்ப் ஆதரவுக் கும்பல் வெறியாட்டம்....

வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடமான ‘கேப்பிட்டல்’ கட்டிடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த வன்முறை நடந்துள்ளது. இதில் இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத இந்த வன்முறை - கலவரம், அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் டொனால்டு டிரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளைநிராகரிக்கும்படி துணை ஜனாதிபதி மைக் பென்சை வற்புறுத்தி வருகிறார்.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக புதனன்று (இந்திய நேரப்படி வியாழன் காலை) நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது டிரம்ப்ஆதரவு கலவரக் கும்பல் நாடாளு மன்றத்தில் புகுந்தது.சில கலவரக்காரர்கள் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று நாடாளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.கலவரக்காரர்கள் அவை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். நாற்காலிகளை நொறுக்கினர். அவைத் தலைவர்நான்சி பெலோசி அலுவலகத்திலும் கலவரக்காரர் ஒருவர் புகுந்து அடித்துநொறுக்கி, பெலோசியன் இருக்கையில் உட்கார்ந்து அட்டகாசம் செய்தார்.

முக்கிய நிகழ்வு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதலில் தேர்தல் சபை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் ஜனாதிபதியை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள்.நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்படி தேர்தல் சபை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை டிசம்பர் 14ம் தேதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவர்களில் அனுப்பிவைத்தனர். அந்த வாக்குகள் புராதன மகாகனி மரப்பெட்டிகளில் வைத்து கேப்பிட்டல் கட்டடத்துக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.அந்த வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எண்ணும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தக்கலவரம் நடந்துள்ளது. வாக்குகளை எண்ணி முடித்து ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றம் சான்றிதழ் அளிக்கவேண்டும். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனது ஆதரவாளர்களை டிரம்ப் தூண்டிவிட்டதன் விளைவே இந்தக் கலவரம்.

இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த வாக்குச் சீட்டுகள் காப்பாற்றப்பட்டதாக ஒரு செனட் உறுப்பினர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்த வாக்குச் சீட்டுகள்எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஓராண்டுகாலத்துக்கு பொதுமக்கள் விரும்பினால் சரிபார்ப்பதற்காக ஃபெடரல் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கலவரத்தில் ஊடகங்களும் தாக்கப்பட்டன. இதையடுத்துவாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் கணக்குகள் முடக்கம்
கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார். டிவிட்டர், டிரம்ப்பின் கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது.முன்னாள் ஜனாதிபதியும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

4 பேர் பலி, 52 பேர் கைது,5 ஆயுதங்கள் சிக்கின
முன்னதாக கலவரத்தின் போது போலீசார் சுட்டதில் ஒரு பெண் இறந்தார். இது தவிர, மருத்துவ அவசரநிலை காரணமாக மூன்று பேர் இறந்துள்ளனர் என வாஷிங்டன் போலீஸ் கூறியுள்ளது. இதுவரை 52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறிய தற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்குகளை எண்ணும் பணி மீண்டும் தொடர்கிறது
புதன்கிழமை இரவே மீண்டும்தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடரும் என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார். அதன்படி அப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் இந்த கலவரத்தை எதிர்த்தும், பைடனின் வெற்றியை ஆதரித்தும் பேசத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசி வந்ததால்தான் கலவரம் வெடித்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதைபயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அந்த சட்டப் பிரிவுக்கு 25வது திருத்தம் என்றுபெயர். டிரம்பின் அமைச்சரவைக்கு உள்ளேயே இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து பேச்சு எழுந்துள்ளது.அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில்செய்யப்பட்ட அந்த 25-வது திருத்தத்தின்படி, ஜனாதிபதிக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.தற்போதைய நிலையில், முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஆகியோர், ‘டிரம்ப் தகுதியோடு இல்லை

;