world

img

மக்கள் முடிவை ஏற்க மறுத்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் - 4 பேர் பலி

மக்கள் முடிவை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோபைடன் வெற்றி பெற்றதை அறிவிக்க நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கூடியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் ஜோபைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நாடாளுமன்றம் அதிபர் மாளிகையிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அப்போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஜேபைடனை அதிபராக அறிவித்ததற்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மேலும் ட்ரம்ப் ஆதரவு கும்பல் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டமற்ற உறுப்பினர்களும் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 
 

;