world

img

டிரம்ப் ஆதரவுக் கும்பல்... 1ஆம் பக்கத்தொடர்ச்சி....

1-ஆம் பக்கத் தொடர்ச்சி...  

என்பதால் மைக் பென்ஸ் செயல் தலைவர் ஆகிறார்’ என்று நாடாளுமன்றத் தலைவர்களுக்கு கடிதம் எழுதிதான் இதைச் செய்ய வேண்டும். 1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை. ஆனால், இதுவரை இதற்கான கோரிக்கை துணை ஜனாதிபதி மைக்பென்சிடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்படவில்லை.வெர்மான்ட் மாகாண குடியரசுக்கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து இந்தப் பிரிவைபயன்படுத்தும்படி கோரியுள்ளனர்.

உலகத் தலைவர்கள் கண்டனம்
அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளனர்.வாஷிங்டனில் நடக்கும் கலவரம், வன்முறை குறித்த செய்திகளைப் பார்ப்பது வேதனை தருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இதுபற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “அமைதியாகவும், ஒழுங்கான முறையிலும் ஆட்சி மாற்றம் நடைபெறுவது தொடரவேண்டும். சட்ட விரோதப் போராட்டங்கள் மூலமாக ஜனநாயக நடைமுறை சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு
முறைப்படி நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து டிரம்ப் விமர்சனம் செய்து வருவதற்கும், அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்துள்ள கலவரத்துக்கும் டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலேயே எதிர்ப்பு பெருகி வருகிறது.குறிப்பாக குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்த சம்பவத்துக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். ‘இன்று நடந்ததுஅருவருப்பானது’ என்று நெப்ராஸ்கா மாநிலத்தை சேர்ந்த பென் சஸ்ஸே என்ற செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.ஜோர்ஜா மாநிலத்தில் செனட் சபைக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் தோல்வியடைந்த செனட்டர் கெல்லி லெஃப்லர்கூட இதனைக் கண்டித்துள்ளார். பைடன் வெற்றிக்கு சான்றிதழ் அளிப்பதற்கான தமது ஆட்சேபனையையும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.நல்ல மனசாட்சியோடு இந்த தேர்வர்களுக்கு சான்றிதழ் அளிப்பதற்கு இப்போது என்னால் ஆட்சேபனை செய்ய முடியாது என்றுஅவர் தெரிவித்துள்ளார். மீண்டும் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில்பேசிய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ‘அமெரிக்க கேபிட்டல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்’ என்று தெரிவித்துள்ளார்.

;