world

img

உலகில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.45 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.45 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.15 லட்சமாக அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீனாவின் ஊகான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலகின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தாக்குதலின் இரண்டாம் அலை வீசத்துவங்கி உள்ளது. இந்நிலையில் தற்போது வைர உலகம் முழுவதும் இதுவரை 13,45,25,543 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29,15,012 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,83,27,772 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,32,82,759 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில்  1,01,803 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

;