உலகின் கண்ணுக்கு தெரியும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கரீபியன் சதுப்புநிலக் காட்டில், மனித கண் இமைகளின் அளவு மற்றும் வடிவத்திற்கு வளரும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் 0.9 செ.மீ. நீளமுள்ளவை. இதுவரை கவனிக்கப்பட்ட மிகப்பெரிய பாக்டீரியாக்கள் ஆகும்.
கலிஃபோர்னியாவின் பெர்க்லியில் உள்ள கூட்டு ஜீனோம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நுண்ணுயிரியலாளர் ஜீன்-மேரி வோலாண்ட் கூறுகையில் எவரெஸ்ட் சிகரத்தின் அளவுள்ள மற்றொரு மனிதனை சந்திப்பது போல் இது இருக்கும் என கூறினார்.