world

img

23,000 வருடங்களுக்கு முன்னர் வட அமெரிக்காவிற்குள் மனிதர்கள் நுழைந்துள்ளதாக ஆய்வில் கண்டுபிடிப்பு !

நியூ மெக்சிகோ: வட அமெரிக்காவிற்குள்  23,000ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் நுழைந்துள்ளனர் என்பதை நியூ மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட புதை படிவ காலடித்தடங்களை ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .

ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டத்திலிருந்து சிதறிய பிறகு , மனிதர்கள் எப்போது அமெரிக்காவிற்குச் சென்றனர் என்ற கேள்விக்கான விடை நீண்ட நாட்களாகப் புதிராகவே இருந்து வந்தது . இந்நிலையில் , கடந்த 2009ஆம் ஆண்டு நியூ மெக்சிகோவில் ,  ஒயிட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவிலுள்ள ஒரு வறண்ட ஏரி படுக்கையில் , சில கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன . அதை ஆய்வு செய்த அமெரிக்கப் புவியியல் சர்வேயின் விஞ்ஞானிகள் ,  இந்த கால்தடங்களின் வயது சுமார் 22,800 மற்றும் 21,130 வருடங்களாக  இருக்கலாம் என்று தோராயமாகக் கணக்கிட்டனர் . இதன்மூலம் , மனிதர்கள் அமெரிக்கக் கண்டத்திற்குள் நுழைந்த காலத்தை அறிய வழிவகை செய்யப்பட்டது .  

மேலும் , கல் , கருவிகள் , புதை படிவ எலும்புகள் மற்றும் மரபணு பகுப்பாய்வுகள் மூலம் , மற்ற சில ஆராய்ச்சியாளர்களும் , 13.000 முதல் 26,000 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் , மனிதர்கள் அமெரிக்கக் கண்டத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் . 

பெரும்பாலான விஞ்ஞானிகள் ,  ஆசியாவையும் , அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள அலாஸ்காவையும் இணைக்கும் , கடலுக்கு அடியில் மறைந்த பழங்காலத்துப் பாலம் வழியாக மனிதர்கள் மேற்கு அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்று யூகித்திருந்தனர் . ஆனால் , தற்போதைய ஆய்வு மூலம் , மனிதர்கள் நிச்சயமாக வட அமெரிக்காவிற்குள்தான் நுழைந்துள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது .

 

 

;