world

img

அமெரிக்க மக்களுக்கு தான் முதலில் கோவிட் - 19 தடுப்பூசி - ஜோ பைடன் அறிவிப்பு

முதலில் அமெரிக்க மக்களுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு மீதமுள்ள தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு பகிரப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் ஜோ பைடன் கூறியதாவது

அமெரிக்க மக்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு , மீதம் இருக்கும் தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு பகிரப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கூறினார். 

வளரும் நாடுகளில் தடுப்பூசி விநியோகம் செய்வதற்கான  உலக சுகாதார அமைப்பின் (WHO) திட்டத்திற்கு அமெரிக்கா ஏற்கனவே 4 பில்லியன் டாலர் வழங்கவதாக உறுதியளித்துள்ளது. 

மேலும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கும் கொரோனாத் தடுப்பூசி மிக அவசியம் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
 

;