world

img

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் காவல்அதிகாரியே குற்றவாளி  என நீதிமன்றம் தீர்ப்பு

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் காவல்அதிகாரியே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் பகுதியில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் தனது கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.  இந்த வீடியோ சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு  நீதி கேட்டு லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்கா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் காவல்துறை அதிகாரி டெரிக் சாவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
இந்தத் தீர்ப்பு குறித்து ஜார்ஜின் இளைய சகோதரர் பிளோனிஸ் பிளாய்ட் கூறியதாவது:

இன்று நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம். ஜார்ஜூக்கான விடுதலை எங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் விடுதலை. இந்த வெற்றி மனிதநேயத்துக்குக் கிடைத்த வெற்றி. அநீதியை நீதி வென்றுள்ளது. ஒழுக்கமின்மையை ஒழுக்க நெறிகள் வென்றுள்ளது. என் சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவர், வெறும் டி ஷர்ட்களில் இருக்கும் புகைப்படமாக இருந்து விடக்கூடாது என நினைத்தேன். இன்று நாங்கள் மீண்டும் சுவாசிக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

;