world

img

மோசமான வானிலை காரணமாக ஸ்பேஸ் - எக்ஸ் விண்கலம் பூமி திரும்புவதில் தாமதம் : நாசா  

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலத்தில் பயணித்தவர்கள், மோசமான வானிலை காரணமாகப் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

ஸ்பேஸ்-எக்ஸ் க்ரூ-2 விண்கலம் மூலம் ஆய்வுப் பணிக்காகக் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி 4 விண்வெளி வீரர்கள் விண்ணிற்குச் சென்றனர். க்ரூ-2  என பெயரிப்பட்ட இந்த விண்வெளி ஆய்வு திட்டத்தில் விண்ணுக்குச் சென்று பணியினை முடித்த அவர்கள், பூமிக்குத் திரும்பவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாகப் பயணம் தாமதமானதாகத் தெரிவித்த நாசா, அவர்கள் இன்று சர்வதேச ஆய்வு மையத்திலிருந்து புறப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

க்ரூ-3 திட்டத்தில் விண்ணுக்குச் செல்லும் பணி, பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 10ஆம் தேதி ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. 

;