world

img

விரைவில்  நீரை கைப்பற்றுவதற்கான போர் உருவாகும்..!


வாஷிங்டன், ஏப்ரல்.9-
இதுவரை எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போர்தான் நடந்து வந்தது. இனி விரைவில் நீரை கைப்பற்றுவதற்கான போர் நடைபெறும் என அமெரிக்க துணை அதிபர் கமாலா ஹரிஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் அதிபர் பைடனின் அரசு வேலை மற்றும் அடிப்படை வசதிக்கான கட்டுமான கொள்கை குறித்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமாலா ஹாரிஸ், நான் வெளியுறவு சார்ந்த பல கூட்டங்களில் கடந்த காலங்களில் பங்கெடுத்திருக்கிறேன். அதன் மூலம் நான் தெரிந்து கொண்டது. இதுநாள் வரை உலகில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்றவே பல பெயர்களில் போர் நடைபெற்று வந்தது. ஆனால் இனி வருங்காலங்களில் விரைவில் நீர்வளம் எங்கு இருக்கிறதோ, அந்த பகுதியை கைப்பற்றுவதற்கான போர்  உருவாகும் என்று குறிப்பிட்டார். 
இதன் மூலம் சமூக வலைதளங்களில் இதுவரை அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது தொடுத்துள்ள போரின் பின்னணியில் எண்ணெய் வளம் குறியாக இருந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஈராக் உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா குறிவைத்து போர் தொடுத்து கைப்பற்றியதன் பின்னணியில் எண்ணெய் வளம்தான் குறியாக இருந்திருக்கிறது என்பதை அமெரிக்காவின் துணை அதிபரே ஒத்துக் கொண்டிருக்கிறார். உண்மையை சொல்லியிருக்கிறார் என எழுதி வருகின்றனர். 
 

;