world

img

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை பதிவு செய்த பெண்ணுக்கு புலிட்சர் விருது....  

வாஷிங்டன்:
அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020 ஆம் ஆண்டுமே 25 அன்று கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரி தனது காலால் அவரது கழுத்தை அழுத்திக் கொன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளும் கண்டித்தன. இதனை வீடியோவாக பதிவு செய்தவர் 17 வயதான டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண். இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து காவல் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவம் என கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடகப் பிரிவில் புலிட்சர் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

;