world

img

பைசர் கொரோனா தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி....

ஸ்டாக்ஹோம்:
கொரோனா வைரசுக்கு எதிரான பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறுநாடுகளில் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். சில நாடுகளில் தடுப்பு மருந்துபயன்பாட்டுக்கு வந்துள்ளது.  இந்நிலையில் பைசர், பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் பலகட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளன.இதனை தொடர்ந்து அவற்றை தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.  இதில் வெற்றி பெறும் நிலையில்,  டாக்டர்கள், சுகாதாரபணியாளர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட் டோருக்கு முதற்கட்ட தடுப்பு மருந்துகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பைசர் மற்றும் பயோ என்டெக் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவால், பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பு மருந்துகள் முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும். 

;