world

img

அமெரிக்காவில் ஒருவருக்கு ‘மங்கிபாக்ஸ்’ வைரஸ் பாதிப்பு....

வாஷிங்டன்:
அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்துவரும் ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனை செய்ததில், மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பாதிப்பு ஏற்பட்டநபர் டல்லாஸ் நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர்லாகோஸ் நகரில் இருந்து, நைஜீரியா, டல்லாஸ் என பயணம் செய்து வந்துள்ளார். அவருடன் விமான பயணம் செய்தபயணிகளை தொடர்பு கொள்ளும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;