world

img

அமெரிக்கா: அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி - 100 பேரின் நிலை?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 100 பேரை காணவில்லை. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரை அருகே இருந்த 12 அடக்கு மாடி கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 100க்கும் மேற்பட்ட மீட்புப்படையில் விபத்தில் சிக்கிய 12 வயது சிறுவன் உள்ளிட்ட 99 பேரை மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கிய சுமார் 100 பேரின் நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அவர்களை இடிபாடுகளுக்கிடையே தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மீட்பு பணிகள் குறித்து மியாமி-டேட் தீயணைப்புத் தலைவர் ஆலன் கொமின்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமையும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான கட்டிடம் கட்டி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது . பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக, இந்த கட்டிடம் கான்கிரீட் மறுசீரமைப்பு மற்றும் வழக்கமான பழுது போன்ற பிற பராமரிப்புகளுக்கு உட்பட்டுள்ளது என்றும் இதுபோன்ற அசாம்பாவிதம் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று காண்டோ சங்கத்தின் வழக்கறிஞர் கென்னத் டைரெக்டர் கூறினார். புளோரிடா கட்டிடங்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டமைப்பு பாதுகாப்பிற்காக மறுசீரமைக்கப்பட வேண்டும், மேலும் கட்டிடம் அந்த செயல்முறையைத் தொடங்கியுள்ளது என்று சிவில் இன்ஜினியரும் மாகாணத்தில் ஆலோசகர் திட்ட அதிகாரியுமான வால்டர் கெல்லர் கூறினார்.  கடல்நீரின் அரிக்கும் விளைவுகளைத் தாங்க கட்டிடங்களின் கான்கிரீட் முகப்பை அடிக்கடி வலுப்படுத்த வேண்டும். கட்டிட சுவர்களில் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய வீட்டு உரிமையாளர்கள் சங்கம் தவறிவிட்டதாக வளாகத்தில் வசிக்கும் ஒருவர் புகார் அளித்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன. 
கட்டிடத்தின் கூரையில் பணிகள் நடைபெற்று வருகின்றன, கட்டிட ஆய்வாளர்கள் சமீபத்தில் கோபுரத்தை பார்வையிட்டதாக சர்ப்சைட் கமிஷனர் எலியானா சல்ஹவுர் கூறினார்.


 

;