world

img

அதிகாரத்தை தக்கவைக்க மியான்மர் ராணுவ ஆட்சியில் 900 பேர் கொலை...

 நியூயார்க்:
அதிகாரத்தை தக்கவைப்பதற்காக மியான்மரில் ராணுவ ஆட்சியில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டதற்கு  ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சிஅதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்தது. ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை இல்லாத அளவில்  மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை ஒடுக்க ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.  பல்வேறு அடக்குமுறைகளையும் மேற்கொண்டனர்.  இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா.வுக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஸ்கிரானெர் பர்ஜனர் ஐ.நா. பொது சபையில் கூறுகையில், ராணுவம்மற்றும் அவற்றின் நியமன அதிகாரிகள் மியான்மரில் நடந்து வரும் ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நடப்பு சூழ்நிலையில், அந்நாட்டில் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கை எதுவும் நடைபெறவில்லை.  படுகொலைகள் தொடர்கின்றன.  கடந்த பிப்ரவரியில் இருந்து போராட்டக்காரர்கள் மற்றும் வழிபோக்கர்கள் என பொதுமக்களில் 900 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் உள்ள பாதுகாப்புப் படையினர், அவர்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடக் கூடிய ஆபத்தும் அதிகரித்து காணப்படுகிறது. அதிகாரம் தக்க வைக்கப்பட வேண்டும் என்பதற்காக ராணுவம் மேற்கொண்டு வரும்நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

;