world

img

மியான்மர் ராணுவத் தலைவரின் மகன், மகள் மீது பொருளாதார தடை - அமெரிக்கா

மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் லேங்கின் மகன், மகள் மீதும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 6 நிறுவனங்களுக்கும் எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகள் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியீட்டு வருகின்றனர். 
இந்நிலையில் மியான்மர் இராணுவத் தலைவர் மின் ஆங் லேங்கின் ஆங் பே சோன் (Aung Pyae Sone), கின் திரி தெட் மொன் (Khin Thiri Thet Mon) மகன், மகள் இருவர் மீதும், அவர்கள் கட்டுபாட்டி உள்ள 6 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையில்க் கூறியதாவது
அமைதியாக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது இராணுவம் கடுமையாக தாக்கியது ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று, சுமார் 200 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள்னர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 
மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைத் தொடர்ந்து கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) எச்சரித்துள்ளார்.
 

;