world

img

லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் 

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் சில மாகாணங்களில், 20 சதவீத மக்கள் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, தென் மாகாணங்கள் 16 சதவீத மக்கள் வீட்டு வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, வாடகை செலுத்த முடியாத அமெரிக்கர்களை, அவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், வாடகை செலுத்தாத லட்சக்கணக்கானோர் வீட்டிலிருந்து வெளியேற மறுத்து, அரசிடம் உதவி கோரி வருகின்றனர். இதற்காக அரசு ஒதுக்கிய நிதி
யைப் பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்காமலேயே பிரதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்
குள்ளாகியுள்ளனர். அமெரிக்கா வீட்டு நீதி குழுக்களின் கூட்டணியைச் சேர்ந்த மக்கள் பாஸ்டனில், வெளியேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்
பாதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

;