world

img

உலகின் 196 நாடுகளுக்கும் பயணம் செய்து உலக சாதனை படைத்த லெக்சி அல்போர்ட் 

உலகின் 196 நாடுகளுக்கும் பயணம் செய்து அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் லெக்சி அல்போர்ட் சாதனை படைத்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணித்த இளம் பெண் என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார், அமெரிக்காவைச் சேர்ந்த லெக்சி அல்போர்ட்.

லெக்சி அல்போர்ட் 196 நாடுகளுக்கும் பயணம் செய்து உள்ளார். இளம் வயதில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தவர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ள இவர், 2013 ஆம் ஆண்டு 24 வயதில் ஜேம்ஸ் அஸ்க்வித் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;