world

img

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் விண்கலம்....

வாஷிங்டன்:
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது  குறித்து ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக கடந்த ஆண்டு ஜூலை 30 அன்று நாசா விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை அனுப்பினர். இந்தநிலையில், ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பிய தகவலின்படி, அது தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. 

;