world

img

பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 அறிமுகம் - கூகுள் நிறுவனம் தகவல் 

பிக்சல் ஸ்மார்ட்போன்களில் முதலில் ஆண்டாய்டு 12 பயன்பாட்டிற்கு வரும் எனக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பான ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் முதலில் அறிமுகமாக இருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பிக்சல் 3, 3ஏ, பிக்சல் 4, 4ஏ மற்றும் பிக்சல் 5, 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் 12 இறுதி வடிவத்தை விரைவில் அப்டேட் செய்து கொள்ளலாம்.வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம் மெட்டீரியல் யூ என வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வருட இறுதியில் சாம்சங் கேலக்ஸி, ஒன் பிளஸ், ஓப்போ, ரியல்மீ, டெக்னோ, விவோ மற்றும் ஸியோமி ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்ட் 12 பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. 

;