world

img

சர்வதேச சைபர் பாதுகாப்பு  குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்.....

நியூயார்க்:
சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீட்டு பட்டியலில் இந்தியா 37 இடங்கள் முன்னேறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு அட்டவணையில் (குறியீடு)  47-வது இடத்தில் இருந்து 10 இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளாக இத்தகைய பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. சர்வதேச அமைதி மற்றும்  சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பேசுகையில், பயங்கரவாத குழுக்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் வெறுப்புணர்வை விதைக்கவும் இணையவெளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றன.  இதுபோன்ற இணையவெளி தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

;