world

img

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ சோதனை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ப்ளோரிடா வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டிரம்ப், கடந்த 2016 முதல் 2020 வரை அதிபராக பதவி வகித்தார். அதன் பிறகு நடந்த தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜோ அதிபரிடம் படுதோல்வி அடைந்தார். இருப்பினும், வரும் 2024-ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

இதற்கிடையில், டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். மேலும், மோசடிகளைச் செய்ததாகவும் பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டிரம்புக்கு சொந்தமான ஃப்ளோரிடா உள்ள தனது வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிபர் பதவிக் காலத்தில், அதிகாரப்பூர்வ பதிவுகள் சிலவற்றை தவறாகக் கையாண்டது தொடர்பாகவும், அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த 15 பெட்டிகளை டிரம்ப் தனது ஃப்ளோரிடா வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த ஆவணங்களை அழிப்பதற்கும் முயற்சி செய்தது தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று சட்ட வல்லுநர்களால் கூறப்படுகிறது.

;