world

img

வெடித்துச் சிதறியது ‘ஸ்டார் ஷிப்’ ராக்கெட்...

வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார் ஷிப்’  ராக்கெட்டின் முன்மாதிரி அறிமுகம் செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

சிறிது தடுமாற்றத்துடன் தரையிறங்கிய ‘ஸ்டார் ஷிப்’  நிலத்தை தொட்ட சில நொடிகளில் தீப்பிடித்து சுக்குநூறாக வெடித்துச் சிதறியது. 3 இன்ஜின்களும் அடுத்தடுத்து செயலிழந்ததே விண்கலம் வெடித்துச்சிதற காரணம் என்று கூறப்படுகிறது. ராக்கெட் வெடித்துள்ளபோதும் தங்களது எதிர்காலஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ள தாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

;