world

img

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம்.... உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்...

ஜெனிவா:
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது கொரோனா வைரஸ் பரவுவதை எளிமையாக்கும். இது அதற்கான நேரமல்ல என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துஉள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நான்காவது வாரமாகக் குறைந்துஉள்ளது. இரண்டாவது வாரமாக இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தனி நபர்கள் முகக் கவசங்களை அணியாமல் இருப்பதற்கும், உலக நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும் இது சரியான தருணம் அல்ல. மேலும்,கொரோனா பரவல் குறித்து சீனாவுக்குச் சென்று ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பின் குழுவின்அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஸ்புட்னிக், மாடர்னா,பைசர் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துஉள்ளன. உலகம் முழுவதும் 10கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

;