world

img

அமெரிக்காவில் மீண்டும்  கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை ஊரடங்கு உத்தரவு


மின்னிசோட்டா, ஏப்.12-
அமெரிக்காவில் மீண்டும் கருப்பின இளைஞரை காவல் துறையினர் சுட்டு படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகருக்கு அருகே புரூக்ளின் சென்டர் நகர் இருக்கிறது. இந்த பகுதியில்  சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக கருப்பின இளைஞர்  டான்டே ரைட்டை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அப்போது காவலர்களுக்கும் டான்டே ரைட்டுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது  டான்டே ரைட்  தனது காரில் ஏறி  ஒரு சில அடி தூரம் சென்றிருக்கிறார். அப்போது அவரை நோக்கி ஒரு காவலர் சுட்டதில் டான்டே ரைட் படுகாயமடைந்துள்ளார். அப்போது அவரது கார்  நிலை தடுமாறியிருக்  வேறொரு கார் மீது மோதியிருக்கிறது.  பின்னர் அதே இடத்தில் டான்டே உயிர் இழந்ததாக புரூக்ளின் சென்டர் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த காருக்குள் இருந்த மற்றொரு பெண்மணி உயிருக்கு ஆபத்தின்றி தப்பியதாக தெரிய வந்துள்ளது.
இது அங்கிருக்கும் கருக்கின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட்டமாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது போராட்டக்குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து காவல்துறையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். இந்நிலையில் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே போன்று அமெரிக்காவில்  ஜார்ஜ் ஃபிளாய்ட்  என்ற கருப்பினத்தவரை அங்கிருக்கும் காவல்துறையினர் கழுத்தில் மிதித்து அழுத்தி கொன்றனர். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பரவியதை மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. அடுத்து அந்த விவகாரம் உலக அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் மின்னிசோட்டா மாகாணத்தின் நகர மேயர் எலியாட் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "சட்ட அமலாக்கத்துறையினரால் மற்றுமொரு கருப்பின மனிதர் உயிரிழந்திருப்பதற்கு அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது," என கூறியுள்ளார்.
 

;