world

img

மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியம்..... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை.....

ஜெனீவா:
மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியம் என்று  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில்  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது. தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புகிறார்கள். ஆனால் அது தவறு. எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்று தெரிவித்துள்ளார்.உலக சுகாதார அமைப்பின் உயரதிகாரி மரியா வான் கெர்கோவ் கூறுகையில், தொடர்ந்து 7 வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகில் கொரோனா தொற்று 9 சதவீதம்அதிகரித்துள்ளது.  இறப்பு எண்ணிக்கையும் ஒரே வாரத்தில்  அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

;