world

img

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைவு - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தரப்பில், “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 749 பேர் ஆகும். கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி கொரோனாவுக்கு 822 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.”

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், மே மாதத்துக்குள் அமெரிக்கா மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போதுமான அளவு கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

;