world

img

உலகில் 11.19 கோடியை தாண்டியது கொரோனா தொற்று 

உலக அளவில் கொரோனா பாதிப்பு 11.19 கோடியை தாண்டி உள்ளது. 

உலகம் முழுவதும் இன்று காலை 9 மணி நிலவரப்படி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11 கோடியே 19 லட்சத்து 55 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் உகாண் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், தொற்று பரவி வருகிறது
இன்னைற சூழலில் உலகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 11,19,55,416 ஆக உள்ளது. இதுவரை 8,73,16,322 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  அதுபோல, உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 24லட்சத்துக்கு 77ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், உலகம் முழுவதும்  2.21 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93 ஆயிரத்து 900-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்திலும் பிரேசில் 2வது இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

;