world

img

"உலகளவில் கரோனா பாதிப்பு 11.26 கோடியாக உயர்வு 

"உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது
கொரோனாப பாதிப்பு இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11.26 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் 24,96,749 போ்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,82,39,672 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,19,17,725 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 92,218 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,88,97,718 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,14,996 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 1,10,30,176 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.   1,56,598 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;