world

img

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 17.33 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.33 கோடியை எட்டி உள்ளது.
 சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிரித்து வருகிறது.  இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகளவில் 17.33 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37.27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 15.62 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். 
அமெரிக்காவில் நேற்று புதிதாக 16,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 515 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் மொத்தம் 3.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,12,204 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

;