world

img

அமெரிக்கா : ஜார்ஜ் பிளாய்ட் - ஐ கொன்ற  காவல் அதிகாரிக்கு 22 ஆண்டு சிறை


 
வாஷிங்டன், 
உலகையே உலுக்கும் வகையில் ஜார்ஜ் பிளாய்ட்- ஐ  படுகொலை செய்த காவல்துறை அதிகாரிக்கு அமெரிக்க நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. 
அமெரிக்காவின் மினியா போலீசில் கடை ஒன்றில் கள்ள நோட்டு கொடுக்க முயன்றதாக கூறி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நடுரோட்டில் வைத்து  ஜார்ச்பிளாய்டு என்ற கருப்பினத்தவரை டெரக் சாவ்வின் என்ற காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது திடீரென ஜார்ஜ்பிளாய்டின்  கைகளை பின்பக்கமாக கட்டி, கீழே வீழ்த்தினர். பின்னர்  பிளாய்டின் கழுத்தின் மீது, தன் கால் முட்டிகளால் நெருக்கியதால், ஜார்பிளாய்ட் மூச்சுவிட முடியாமல் திணறினார். மீண்டும் மூச்சு விடாதபடி போலீஸ் அதிகாரி நடுரோட்டில் வைத்து அவரை சித்தரவதை செய்தார். அப்படியே இறுதிவரை  ஜார்ஜ்பிளாய்டு மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தார். 
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. இதையடுத்து உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரக் சாவ்வின்(45) உள்ளிட்டோர் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில்  டெரக் சாவ்வின் மீது, மூன்று விதமான கொலை குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு இருந்தது. இந்த மூன்று குற்றச்சாட்டிலும் டெரக்சாவ் குற்றவாளி என்பதை நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது. இந்தவழக்கின் தண்டனை விபரத்தை வெள்ளியன்று  வெளியானது. இதில், டெரக் சாவ்விற்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
ஆனால் இந்த தண்டனை மிகக்குறைவானது. இது பாரபட்சமானது.  இதே போன்று சில தவறுகளில் ஈடுபட்ட கருப்பினத்தவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெள்ளை போலீஸ் அதிகாரிக்கு வெறும் 22 வருடம் மட்டுமே சிறை என்பது ஏற்க தக்கதல்ல என்று கடும் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.

;