world

img

அமெரிக்கா, கனடாவில் கொளுத்தும் வெயில்...   உயரும் பலி எண்ணிக்கை...    

வாஷிங்டன்
வடஅமெரிக்கா கண்டத்தில் வழக்கத்திற்கு மாறாக வெயில் கொளுத்தி வருகிறது. இதில் மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. 

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது கனடா தான். அந்நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.  குளிர் பிரதேசமான வான்கூவர் நகரில் அனல் காற்றால் இதுவரை 134 பேர் உயிர் இழந்துள்ளனர். கனடாவின் மற்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 486 பேர் கடும் வெப்பத்தால் பலியாகியுள்ளனர். 

தொடர்ந்து கனடாவில் அனல் காற்று வீசும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளன.  மேற்கு கனடாவில் கடும் வெப்பம் காரணமாக வனப்பகுதியில் தீ பிடித்துள்ளது. இந்த காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.  எனவே வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  கனடாவில் மட்டும் இன்றி மேற்கு அமெரிக்காவில் பல பகுதிகளிலும் வெப்பம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

;