world

img

வசூலில் மீண்டும் சாதனைப் படைத்த அவதார் திரைப்படம்

உலகிலேயே அதிகமாக வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்ற பெருமையை அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது, அவதார் திரைப்படம் மீண்டும் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கியத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் அவதார். இந்த திரைப்படம் உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ,சுமார் 2.78 பில்லியன் டாலர் வசூலித்து, உலக சாதனைப் படைத்தது. 
இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு Walt Disney தயாரிப்பில் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று குறுகிய காலத்தில்  2.79 பில்லியன் டாலர் வசூல் செய்து அவதார் படம் சாதனையை முறியடித்தது. 
இந்த நிலையில் சீனாவில் கடந்த வெள்ளிக் கிழமை மீண்டும் அவதார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்போது கிட்டத்தட்ட 3.5 மில்லியன் டாலர் வசூல் செய்து, உலகிலேயே அதிக பணம் வசூலித்த பெருமையை மீண்டும்  கைப்பற்றியது.
அதை தொடர்ந்து அவதார் பட தயாரிப்பாளரான ஜான் லாண்டவு, இந்த சாதனை மூலம்  மகிழ்ச்சியடைவதாகவும், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் சீன திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
 

;